ஓபிஎஸ் தலைமையில் அதிமுக உரிமை மீட்புகுழு நேர்காணல்

ஓபிஎஸ் தலைமையில் அதிமுக உரிமை மீட்புகுழு நேர்காணல்

நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் விருப்ப மனு பெற்றவர்களுக்கு ஓ பி எஸ் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று பத்தாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விருப்ப மனு பெற்றனர். விருப்பமனு பெற்றவர்களுக்கு ஓ பன்னீர் செல்வம் தலைமையில் வெள்ளமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் இணைந்து நேர்காணலை நடத்தினர். 40 தொகுதிக்கும் இன்று விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டதில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுகொடுத்துள்ளனர். இதில் ஓபிஎஸ் அவர்கள் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளார். விருப்பமனு பெற்ற ஒவ்வொருவரும் மேடையில் யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் வெற்றி பெற பாடுபடுவோம் என்று பேசினார்கள்.

Tags

Next Story