கொடை வெயில் தாக்கம் அதிமுகவினர் நீர்மோர் வழங்கினர்

கொடை வெயில் தாக்கம் அதிமுகவினர் நீர்மோர் வழங்கினர்

நீர்மோர் வழங்குதல்

தூத்துக்குடியில் கோடை வெயிலின் தாக்கத்தை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டின் பேரில் வடக்கு ரத வீதியில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதை தொடர்ந்து அவர்களது தாகம் தீர்க்க பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் நீர்மோர் பந்தலை திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டின் பேரில் வடக்குரத வீதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்மோர் பந்தலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள்அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்தார் இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர் ,இளநீர், பழம், சர்பத் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பருகினர். இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாநில வர்த்தக அணி செயலாளர் செல்ல பாண்டியன், அகிலா உலக எம்ஜிஆர் மன்ற இனச் செயலாளர் ஹென்றி தாமஸ், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட இளம் பெண் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரண ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க ஆட்டோ சங்கர் செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வழக்கறிஞர் சரவணன், பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், செண்பக செல்வன், முருகன், சேவியர், மாவட்ட இலக்கிய அணி பிரிவு பொற்கிலி ஜான்சன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் சுரேஷ் பெர்னாண்டோ, டைகர் சிவா, வட்டச் செயலாளர் நவசாத், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்திரா செல்லப்பா, தகவல் தொழில்நுட்ப பிரிவு சாம் ராஜ், சகாயராஜ், யுவன் பாலா, மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story