தேர்தல் வருவதால் எய்ம்ஸ் பணிகள் துவக்கம் - மா.சுப்பிரமணியன்

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் தான் தற்போது மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் தொடங்கியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூபாய் 6.74 கோடி மதிப்புள்ள அதிநவீன இருதய கேத் லேப் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன். கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஜீன் 15ம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆறு‌ மாதங்களில் அசுர வேகத்தில் வளர்ந்து அடைந்து உள்ளது. கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையில் நாள்தோறும் 800-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உள் நோயாளிகளாக 160 லிருந்து 200 பேர் வகையிலும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 687 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த மருத்துவமனை திறந்த வைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரையிலும் 88, 589 பேர் புறநானிகளாக சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். 447 கோடி ரூபாய் இந்த மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது Double baloon endoscopy மற்றும் AUTO MRI ஆகிய இரண்டு உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக இங்கு தான் கொண்டு வரப்பட்டுள்ளது.

6.74 கோடி ரூபாய் செலவில் கேத் லேப் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு அரசு மருத்துவமனை இருந்தாலும் 4 மருத்துவமனையில் மட்டுமே கேத்லேப் மையம் உள்ளது. மருத்துவக் கல்லூரி மற்றும் அரச மருத்துவமனையில் 24 கேத்லேப் மருத்துவ மையம் உள்ளது. இன்று 25வது கேத்லேப் மையம் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக 26 வது கேத்லேப் மையம் திருவாரூர் மருத்துவமனையில் அமைய உள்ளது மாரடைப்பு நோய் தான் பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மாரடைப்புக்கான 14 மாத்திரைகள் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டு வருகிறது ஆரம்ப சுகாதார நிலைத்தில் மட்டும் 4779 பேருக்கும் துணை சுகாதார நிலையத்தில் 372 பேருக்கும் என மொத்தமாக 4884 பேருக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.கொரோனா பாதிப்பு குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

கிளஸ்டர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட வில்லை... ஆனால் 3 ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பொது மக்கள் தொழில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு காரணமாக மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கிறார்கள். இதனால் கூட உயிர் இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதய நோய் பிரச்சனை சம்பந்தமான உலக மருத்துவ மாநாடு வருகின்ற 18,19,20 ஆகிய மூன்று நாட்களுக்கு பல துறைகளில் சிறந்து விளங்குகிற சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. தேர்தல் வரவுள்ளதால் தான் தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் தொடங்கியுள்ளது என்றார்.

Tags

Next Story