Ajith: வெற்றி துரைசாமி வீட்டுக்கு வந்த அஜித் - சீக்ரெட்டாக இருந்த இருவரின் நட்பு

vetri duraisamy, Ajith

vetri duraisamy, Ajith

வெற்றி துரைசாமி, ‘என்றாவது ஒரு நாள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்

Ajith: முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனின் இறப்புக்கு நடிகர் அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சென்னையின் முன்னாள் மேயராக இருந்த துரைசாமியின் மகன் வெற்றி இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளார். விலங்குகளை படம் எடுக்க தனது நண்பர் கோபிநாத்துடன் சென்றுள்ளார். இருவரும் கடந்த 4ம் தேதி மாலை கசாங்நளா பகுதியில் காரில் சென்றனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையை ஒட்டி இருந்த சட்லஜ் நதியில் கவிழ்ந்துள்ளது. அதில், ஓட்டுநர் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் கோபிநாத் மீட்கப்பட்டார்.

ஆனால், வெற்றி பற்றிய தகவல் மட்டும் கிடைக்காமல் இருAjith:ந்தது. அவரது உடலை உள்ளூர் போலீசாரும் தேடி வந்தனர். ஒருவாரம் கடந்தும் வெற்றி குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலையில், அவர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி தருவதாக சைதை துரைசாமி அறிவித்திருந்தார். இந்த சூழலில் கிட்டத்தட்ட 8 நாட்களுக்கு பிறகு விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் வெற்றியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ரெகாங்புவாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட வெற்றி துரைசாமி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

வெற்றி துரைசாமியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் இணைந்து சைதை துரைசாமியின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார். 5 மணிக்கு சிம்லாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த வெற்றி துரைசாமியின் உடலுக்கு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

தனது தந்தையின் ஐஏஎஸ் பயிற்சி மையத்தை கவனித்து வந்த வெற்றி துரைசாமி, ‘என்றாவது ஒரு நாள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அஜித்துக்கு நெருங்கிய நண்பராக இருந்த வெற்றி துரைசாமி திரைப்படங்களை தயாரிப்பதிலும், இயக்குவதிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு அஜித்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட வெற்றி துரைசாமி, “வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும், சிறந்த சகாக்களுக்காகவும்” என தெரிவித்திருந்தார். மேலும் வெற்றியின் திருமணத்தில் அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story