அட்சய திருதியை: 30 சதவீதம் விற்பனை உயர்வு
கடந்தாண்டு அட்சய திருதியை தினத்தை விட இந்த ஆண்டு 30 சதவிகிதம் தங்க விற்பனை உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனையை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை 30% உயர்ந்திருக்கிறது. தங்கத்தின் விலை அபரிவிதமாக உயர்ந்து இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கி சென்றனர். அது மட்டுமல்லாமல் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 155 ரூபாய் மற்றும் சவரனுக்கு 1640 ரூபாய் உயர்ந்த போதிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சென்றுள்ளனர். இந்த முறை முன்பதிவு மூலமாகவே 80 சதவீத நகை விற்பனையாகி உள்ளது. மேலும் கடந்த முறையை விட இந்த முறை தங்க நாணயம் குறைவாகவே விற்பனை ஆனது. அதாவது 20 சதவீதம் மட்டுமே தங்க நாணயங்கள் விற்பனையானது மீதமுள்ள 80 சதவீதம் தங்க நகைகளாக விற்பனையானது. தொடர்ந்து தங்கம் விலை உயந்தாலும் இதே போன்ற ஆதரவு மக்களிடையே இருக்கும் ஏனென்றால் வருகின்ற நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1 லட்சம் என்ற அளவிற்கு உயர்ந்து நிற்கும். கடந்த 4 ஆண்டுகளின் அட்சய திருதியை தங்கம் விற்பனையை பார்த்தால் 6 முதல் 7 ஆயிரம் வரை சராசரியாக ஒரு சவரனுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு அட்சய திருதியை காட்டிலும் இந்த ஆண்டு 9 ஆயிரம் கூடுதலாக ஒரு சவரனுக்கு உயர்ந்து உள்ளது இருப்பினும் மக்களிடையே பெருமளவு ஆதரவு உள்ளது என்று சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.
Next Story