வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அழகிரிநாதர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அழகிரிநாதர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அழகிரிநாதர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சேலம் கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோயிலில் நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டி, கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் அழகிரிநாதர் சுவாமி சன்னதி, தாயார் சன்னதி, ஆதி வேணுகோபால் சுவாமி, ராமர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், சந்தான கோபாலகிருஷ்ணர், விஷ்ணுதுர்க்கை, ஆழ்வார், ஆச்சார்யாதிகள் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி விழா டிச.23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா நேற்று நடந்தது. முன்னதாக பெருமாள் சுந்தரவல்லி தாயார், ஆண்டாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தது. பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் பூசி, பூ மாலை அணிவித்து முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவை தொடர்ந்து கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய தடுப்புக்கட்டைகள் கட்டுவது, தூய்மைபணி உள்பட பல்வேறு பணிகள் நடக்கவுள்ளது.
Next Story