எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறு - அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி
தமிழக சட்டமன்றத்தில் . 3வது நாளாக அவை இன்று கூடிய நிலையில், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளக் குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க அதிமுக வலியுறுத்தியது.
கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதிக்கலாம் என அதற்கு சபாநாயகர் மறுக்கவே, அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “அனைத்தையும் வெளிப்படையாக நாங்க சொல்லிட்டோம். ஆகவே, சிபிஐ விசாரணை தேவை இல்லை. மக்கள் மன்றத்தில் தோல்வியடைந்ததால் அதிமுகவினர் சட்டசபையில் அமளி செய்கின்றனர். இல்லாத குற்றச்சாட்டை கூறி சட்டமன்றத்தை முடக்க முயற்சி செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புப்படுத்தி பேசுவோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும். திமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறு. இனி வரும் நாட்களில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக இருக்கும் கள்ளுக்கடைகளை திறக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை'' என்று அவர் தெரிவித்தார்.