அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவு பெறவில்லை -மன்சூர் அலிகான்
அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவு பெறவில்லை; விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சபீர் அகமது உள்ளிட்ட அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி, பெஞ்சமின், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரை சந்தித்து 20 நிமிடங்கள் பேசினார். அவர்களிடம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாம் செய்வேன் என்று மன்சூர் அலிகான் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தனது கட்சி சார்பில் அறிக்கை வெளியிட்ட மன்சூர் அலிகான், கட்டாயம் ஒரு பகுதியில் போட்டியிட கேட்டுள்ளோம் அதிமுகவுடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படவில்லை மற்றும் ஒரு பெரிய கட்சியின் பேச்சு வார்த்தைக்கு வருகின்றனர். யாருடன் கூட்டணி வைக்கிறோம் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.