தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
X

ஸ்டாலின் 

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் புதல்வன்திட்டம் மூலம் 3.20 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர். தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களின் வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1000 வரவு வைக்கப்படும்.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பயன்பெறலாம். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று, தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

புதுமைப் பெண் திட்டத்தைப்போல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story