திற்பரப்பு அருவியில் 10 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி

திற்பரப்பு அருவியில் 10 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி

திற்பரப்பு அருவி


குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வேகமாக நிரம்பியது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. சிற்றாறு அணை நிரம்பி யதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் காரணமாக கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப் பட்டு இருந்தது. இந்த நிலை யில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்துள்ளது.

அணையிலிருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதையடுத்து 10 நாட்களுக்கு பிறகு குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இன்று அருவியில் குளிப்ப தற்கு சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அருவியில் குளிப்பதற்கு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

Tags

Next Story