எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
மாற்று கட்சியினர்
சேலம் மாவட்டம் மேச்சேரி மற்றும் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த திமுக, பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சியினர் 250 பேர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சேலம் மாவட்டம் மேச்சேரி பேரூர் கழக செயலாளர் சி.ஜே.குமார் ஏற்பாட்டில், மேச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த திமுக மேற்கு மாவட்ட பொறியாளர் அணி துணை செயலாளர் சி.ஜே.சுரேஷ் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த மாவட்ட பிரதிநிதி பிரபுகுமார்,
முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் லாலா என்கிற இளங்கோவன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் மதன் மற்றும் சேட்டு, தேமுதிக நிர்வாகி குமார், வார்டு செயலாளர் வேலு, காங்கிரஸ் கட்சி பிரமுகர் முருகேசன் மற்றும் சரவணன், பாமக கட்சியை சேர்ந்த சிவகுமார் உள்பட திமுக, பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்த 200 பேர் இன்றைய தினம் அக்கட்சிகளில் இருந்து விலகி கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதேபோல் சேலம் மாவட்டம், தாரமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் காங்கேயன் ஏற்பாட்டில், அமமுக கட்சியை சேர்ந்த தாரமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பொன்னுசாமி தலைமையில் அக்கட்சியின் விவசாய அணி செயலாளர் முருகேசன் மற்றும் திமுக பிரமுகரான ஆறுமுகம் தலைமையில் தாரமங்கலம் திமுக ஒன்றிய மாணவரணி இணை செயலாளர் செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார், சக்திவேல், சித்தன், ஆறுமுகம், மாணிக்கம் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெஂற்ற இந்த நிகழ்வின்போது புதியதாக கழகத்தில் இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுக துண்டு அணிவித்து, வரவேற்று வாழ்த்து தெரிவித்தாரா். இந்த நிகழ்வின்போது மாநிலங்கள் அவை உறுப்பினர் சந்திரசேகரன், ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணி, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் கலையரசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் லலிதா சரவணன்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சித்தன் மேச்சேரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகரன் நங்கவள்ளி பெருவூர் கழகச் செயலாளர் எம்ராய்டு வெங்கடாசலம் ஒன்றிய அவைத் தலைவர் சாமி அண்ணன் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.