தயார் நிலையில் அம்பேத்கர் மணிமண்டபம் - தமிழக அரசு விளக்கம்.

தயார் நிலையில் அம்பேத்கர்  மணிமண்டபம் - தமிழக அரசு விளக்கம்.

அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம்

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் 134வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில், தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தரக் கோரி, வழக்கறிஞர்கள் செந்தமிழ்செல்வி, நிரஞ்சன் விஜயன் மனு அளித்திருந்தனர். மணி மண்டப வளாகத்தில், அம்பேத்கரின் எழுத்துகள், உரைகளின் தொகுப்பு புத்தகங்களை விற்பனைக்கு காட்சிப்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

விழாவில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. டெண்ட் அமைக்கப்பட்டு, வரக்கூடியவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது என்று அரசு வாதம் செய்யப்பட்டது. தனிப்பட்ட வெளியீட்டாளரின் புத்தகங்களை காட்சிப்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. புத்தகங்களை காட்சிப்படுத்த தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என்பது அரசின் முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

Tags

Next Story