அரசு பஸ் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
சிறுவன் பலி
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியாத்துக்குறிச்சி கிராமம் மேலத் தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து கூலி தொழிலாளி இவரது மகன் சுனில் (8) இவர் இரண்டு வயது முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள கொச பள்ளம் கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
தற்பொழுது பள்ளி விடுமுறை என்பதால் தந்தை வீட்டிற்கு வந்து தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலையில் கல்கேணி பகுதியில் சுனில் வீட்டிலிருந்து தனது பெரியப்பா வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டோரம் சென்றுள்ளார் .
அப்பொழுது விருத்தாச்சலத்தில் இருந்து ஆண்டிமடம் நோக்கி வந்த அரசு பேருந்து சுனில் மீது நேருக்கு நேர் மோதியதில் சுனில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து பஸ் டிரைவர் பஸ்ஸை விட்டு இறங்கி ஓடிவிட்டார்.
இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரத்தில் பஸ்ஸின் முன் கண்ணாடியை அடித்து உடைத்தனர். தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்து போக்குவரத்தை சரி செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சுனில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.