கேஸ் கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்ததில் 83 வயது மூதாட்டி உடல் கருகி பலி
கேஸ் கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்ததில் 83 வயது மூதாட்டி உடல் கருகி பலி
திருச்செங்கோடு பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் (லேட்) தங்கவேல் இவரது மனைவி மீனாட்சி (83) இவருக்கு காந்தாமணி 67 ரேவதி 57 என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் தனியாக வசித்து வரும் இந்நிலையில் கணவனை இழந்த மூதாட்டி மீனாட்சி தனியாக ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வந்துள்ளார். அங்கு மகள்கள் உணவு கொடுக்க வாழ்ந்து வந்த மீனாட்சி அம்மாள் தனியாக ஏதாவது சமைத்து சாப்பிட காபி போட்டு குடிக்க கேஸ் சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு வைத்திருந்துள்ளார். இந்த நிலையில் மதியம் சுமார் மூன்று முப்பது மணிக்கு திடீரென வீட்டுக்குள் இருந்து புகை வந்தது. வீடு திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி தீயணைத்தனர். அதற்குள் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது கட்டிலில் படுத்த நிலையில் இருந்த மீனாட்சி அம்மாள் உடல் கருகி இறந்து போய் கிடந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து வந்து மீனாட்சி அம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கேஸ் அடுப்பை சரியாக மூடாத காரணத்தால் கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து திடீரென வீடு முழுவதும் தீ பரவி வீடு எரிவது தெரியாத நிலையில் உறங்கிக் கொண்டிருந்த மீனாட்சியம்மாள் நெருப்பில் உடல் கருகி இறந்திருக்கலாம் என முதல் கட்ட கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Next Story