தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி

கொடுத்த கடனை திருப்பி கேட்ட தகராறு, ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கிடங்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் வயது 67 ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி ஜெயக்குமாரி இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் கடந்த 19ஆம் தேதி மதியம் நடராஜன் மனைவி ஜெயக்குமாரி அவரது தங்கை காஞ்சனா ஆகிய மூன்று பேரும் வீட்டில் இருந்தனர் அப்போது வீட்டுக்குள் திடீரென நுழைந்த மூன்று வாலிபர்கள் அறையில் கட்டிலில் படித்திருந்த நடராஜனை கீழே தள்ளினர்.

பின்னர் அவரிடம் கத்தியை காட்டி வீட்டில் உள்ள பணம், நகை, பாண்டு பத்திரம் ஆகியவற்றை எடுத்துக் கொடு என மிரட்டினர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தடுக்க வந்த நடராஜன் மனைவி ஜெயக்குமாரி அவரது தங்கை காஞ்சனா ஆகியோரை அவர்கள் கீழே தள்ளினர் பின்னர் நடராஜன் கன்னத்தில் கத்தியால் கீறியதாக கூறப்படுகிறது உடனே மூன்று பேரும் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து நடராஜன் செய்யாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தார் அதன் பெயரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். கூலி படையினர் ஓட்டி வந்த பைக்குகளை வீட்டில் அருகே இருந்ததை பறிமுதல் செய்தனர் .அதை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நடராஜன் செய்யாறு தாலுகா கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் (38) என்பவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். கடைசியாக வாங்கிய கடன் தொகையை திருப்பி கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர், நடராஜனை பழிவாங்க முடிவு செய்தார்.

இதன் பெயரில் தனது நண்பர் செய்யாறு கொடநகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்( 32 ) என்பவருடன் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது அவர் சென்னையில் எனது நெருங்கிய நண்பர்கள் உள்ளனர் அவர்களை வைத்து காரியத்தை கச்சிதமாக முடித்து விடலாம் என கூறியுள்ளனர் பின்னர் சம்பவத்தன்று திட்டமிட்டப்படி இருவரும் மறைவாக இருந்து கொண்டு சென்னையிலிருந்து வர வைத்த மூன்று வாலிபர்களுடன் பைக்கை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

அப்போது அவர்களிடம் நடராஜன் வீட்டில் உள்ள நகை பணத்தை எடுத்து வர வேண்டும் இல்லையெனில் கடன் வாங்கிய பாண்டு பத்திரத்தை எடுத்து வர வேண்டும் என கூறியுள்ளனர் அதன்படி வீட்டுக்குள் சென்றபோது நடராஜன் உட்பட மூணு பேரும் கூச்சல் போடவே அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் தொடர்ந்து சுந்தர், விக்னேஷ் ஆகிய இருவரும் அந்த வாலிபர்களை கார் மூலம் பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் அந்த வாலிபர்கள் விட்டு விட்டு சென்ற பைக்குகள் மற்றும் நடராஜன் கொடுத்த தகவலின் பெயரில் செய்யாறு காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் உதவி ஆய்வாளர் சங்கர் ஆகியோர் விசாரணையை தொடங்கினர் இந்நிலையில் கொடுத்த கடனை திரும்ப கேட்டவரை ஆட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்த சுந்தர் ,விக்னேஷ் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு பைக்குகள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் தலைமறைவாக உள்ள சென்னை கூலிப்படையை சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் இச்சம்பவம் செய்யாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Tags

Read MoreRead Less
Next Story