ஊட்டியில் ஆ.ராசாவுக்கு உற்சாக வரவேற்பு!

நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்ட ஆ.ராசாவுக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தி.மு‌.க., வினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

தமிழகத்தில் 40 தொகுதிகளை முதலமைச்சர் தலைமையில் வெல்லவில்லை, என்றால் இந்தியா குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல் சிதைந்திருக்கும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஊட்டியில் பேசினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி தி.மு.க., சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட ஆ.ராசா 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

இதனையடுத்து நீலகிரி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஊட்டிக்கு வந்திருந்த ஆ.ராசவுக்கு தி.மு.க., வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:- மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் நீலகிரி தொகுதியில் என்னை வெற்றிபெறச் செய்த பொதுமக்களுக்கு நன்றி. தமிழகத்தில் இந்திய கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளது .

மத்தியிலும் ஆட்சியைப் பிடித்திருந்தால் மக்களுக்கான எண்ணற்ற சேவைகளை செய்திருப்போம். எங்களுடைய மொழியை, கலாசாரத்தை எங்கள் திராவிட மாடல் ஆட்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம். 40-க்கு 40-ம் வெற்றி பெற்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் தலைவராக நமது முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார். மத்தியில் ஆட்சிப் பொறுப்பிற்கு வரவில்லையே தவிர சர்வாதிகாரத்தை எதிர்த்து அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிவோம் என்ற மோடியை இந்தியா கூட்டணி 237 இடங்களை வென்று எந்த அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிவோம் என கொக்கரித்தார்களோ அந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து மோடியை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளிய பெருமை நமது முதலமைச்சருக்கு உள்ளது.

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.,வின் ஒவ்வொரு மக்களவை உறுப்பினர்கள் இருந்தாலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை, இது பெரியார், அண்ணா, கலைஞர் மண். மோடி என்னும் பிம்பத்தை இரண்டாவது முறையாக உடைத்து தமிழகம் உங்கள் பக்கம் இல்லை என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றோமோ, தோல்வி அடைந்தோமோ என்பது முக்கியமல்ல, நாம் இந்தியாவை காப்பாற்றுகின்றோம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றுகின்றோம். தமிழகத்தில் 40 தொகுதிகளை முதலமைச்சர் தலைமையில் வெல்லவில்லை, என்றால் இந்தியா குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல் சிதைந்திருக்கும்.

ஒரே நேரத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் இருந்திருந்தால் நீலகிரிக்கு எண்ணற்றத் திட்டங்களை கொண்டு வந்திருப்போம் என்ற கனவு கண்டால் அது தள்ளிப் போய் இருக்கிறது. இப்போது வீணாகிப் போய்விடவில்லை எங்கிருந்தாலும் தொகுதிக்காக குரல் கொடுத்து போராடி நீலகிரி தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story