சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த முதியவர்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த முதியவர்

தீக்குளிக்க முயன்ற முதியவர்


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முதியவர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் பல்பாக்கி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (77) இவர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். நுழைவு வாயிலில் வைத்து திடீரென பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர். இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற முதியவர் நாராயணன் கூறியதாவது:- எனக்கு முனியப்பன் மற்றும் அமிர்தலிங்கம் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர் மூத்த மகன் முனியப்பன் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் எனக்கு சொந்தமான 1.38 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டார். குறித்து இந்த மகனிடம் கேட்டபோது உன்னை திட்டி வெளியேற்றுகிறார் நான் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வந்தேன். இதனால் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்வதை விட அனாதையாக இருக்கும் எனக்கு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்து விடலாம் என நினைத்து தீக்குளிக்க முயற்சி செய்தேன்

மாவட்ட நிர்வாகம் என் மகன் மீது நடவடிக்கை எடுத்து வாழ வழிவகை செய்ய வேண்டும் இவ்வாறு கூறினார். இதனைத் தொடர்ந்து புதிய வரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story