வேலூர் பாஜக வேட்பாளர் ஆதரித்து அன்புமணி பிரச்சாரம்!

வேலூர் பாரதி ஜனதா கட்சியின் வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அணைக்கட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,"தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் தமிழகத்தை கடந்த அரை நூற்றாண்டுகளாக மாறி மாறி ஆட்சி புரிந்து மாநிலத்தையே நாசமாக்கிவிட்டன. இதனாலேயே இவ்விரு கட்சிகளுக்கும் மாற்றாக பா.ஜனதா தலைமையிலான இந்த கூட்டணியை அமைத்துள்ளோம். பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 2014 முதலே இருந்து வருகிறது. இந்த கூட்டணியில் இருந்து அ.தி.மு.க.தான் தற்போது விலகியுள்ளது. பா.ஜனதா எங்கேயும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தமாட்டோம், அதற்கு நாங்கள் எதிரானவர்கள் என்று கூறாத நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பை மறுக்கும் பா.ஜனதாவுடன், பா.ம.க. கூட்டணி அமைத்திருப்பதாக விமர்சித்து வருகிறார். அதேசமயம், முரண்பாடான கொள்கையுடன் இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டே பல மாநிலங்களில் எதிர்த்து போட்டியிட்டுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, சிவசேனா கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருப்பதை எப்படி கூறுவது. பா.ம.க. எந்த கூட்ணியில் இருந்தாலும் எங்கள் கொள்கையான சமூக நீதிக்கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்,"என பேசினார்.

Tags

Next Story