சந்திரபாபு நாயுடுவிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
அன்புமணி ராமதாஸ்
ஆந்திர மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கும், அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்டை மாநிலங்கள் என்ற வகையில் ஆந்திரமும், தமிழ்நாடும் அவற்றின் வளர்ச்சிக்காகவும், நல்லுறவுக்காகவும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் இரு மாநில உறவுகளை வலுப்படுத்தவும், ஆந்திர மாநிலம் பொருளாதாரத்திலும், தகவல் தொழில்நுட்பத்திலும் புதிய உச்சங்களைத் தொட உங்கள் ஆட்சி வழிவகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
Next Story