அண்ணா திராவிட தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம்

அண்ணா திராவிட தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம்

ஓ பன்னீர்செல்வம்

அண்ணா திராவிட தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் 20 ஆம் தேதி அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மயிலாப்பூரில் நடைபெற உள்ளது.
முன்னாள் முதலமைச்சரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் ஒப்புதலோடு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அண்ணா திராவிட தொண்டர்கள் உரிமை மீட்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஜூலை 20ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story