அண்ணா விளையாட்டு விடுதி மாணவிகள் சாதனை

அண்ணா விளையாட்டு விடுதி மாணவிகள் சாதனை

மாணவிகள் சாதனை

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு விடுதி மாணவிகள் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.
விளையாட்டு விடுதிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள மகளிர் விளையாட்டு விடுதி மாணவி ருத்ரா ஸ்ரீ வட்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.மாணவி கயாஸ்மி உயரம் தாண்டுதலில் வெண்கலப்ப தக்கமும், நீளம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். மாணவி கயல்விழி ஜனனி 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்க லப்பதக்கம் வென்றுள்ளார். மாணவிகள் ரோஸ்லின், அஸ்மிதா, வசந்தி, கயல்விழி ஜனனி ஆகியோர் 4 x 400 தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்கள். மாநில அளவிலான போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவிகளை குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் பாராட்டினார்.

Tags

Read MoreRead Less
Next Story