அண்ணா பல்கலைக்கழகம் மேல்முறையீடு.
அண்ணா பல்கலை
கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை செலுத்தவில்லை என கடந்த 2019 ஆம் ஆண்டு புகார் எழுந்தது. புகாரை விசாரித்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம், 2 கோடியே 44 லட்சம் ரூபாயை செலுத்தும்படி கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி 30% தொகையை ஆறு வாரங்களில் டிபாசிட் செய்யும்படி, 2023 ஆம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளார். 73 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை செலுத்தும் நிலையில் பல்கலைக்கழகத்தின் நிதி நிலை இல்லை. தற்போதைய நிலையில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்த முடியும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. மனு நகலை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிய ஆணையர் தரப்புக்கு வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடப்பட்டது. வழக்கு விசாரணை ஜூன் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.