பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம்: அண்ணா பல்கலை., விளக்கம்!!

பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம்: அண்ணா பல்கலை., விளக்கம்!!

அண்ணா பல்கலைக்கழகம்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சீலிடப்பட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கியது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு நபர் தொடர்ந்து பல்கலை. வளாகத்துக்குள் வரும்போது காவலர்கள் விசாரித்தார்களா? என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது. அதில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம். 189 ஏக்கர் பரப்பில் உள்ள பல்கலை. வளாகத்திற்கு 8 வழிகள் உள்ளன. அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் வரும் அனைவரையும் சரிபார்ப்பது என்பது முடியாத காரியம், காவலர்கள் காரணம் கேட்டு உள்ளே அனுப்புவர். மாதந்தோறும் கேமராக்கள் செயல்படுகிறதா என பரிசோதனை செய்யப்படுகிறது. மொத்தம் 988 கேமராக்களில் 849 செயல்படுகின்றன, மற்றவை செயல்படவில்லை. மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி அண்ணா பல்கலைக்கழகத்திலேயே படிப்பை தொடர்வார். காவல் துறையினரின் விசாரணைக்கு அண்ணா பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு வழங்குகிறது என்று தெரிவித்தது.

Tags

Next Story