செய்யாறில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் என்மண் என் மக்கள் யாத்திரை

செய்யாறில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் என்மண் என் மக்கள் யாத்திரை


செய்யாறில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் என் மண் என் மக்கள் யாத்திரை நடந்தது.


செய்யாறில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் என் மண் என் மக்கள் யாத்திரை நடந்தது.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் என்மண் என் மக்கள் பாத யாத்திரை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு 7 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு வந்தார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஐயப்பன் கோவில் அருகில் செய்யாறு சட்டமன்ற தொகுதியின் சார்பாக நகரத் தலைவர் கே.வெங்கட்ராமன் தலைமையில் பாஜகவினர் பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

தொடர்ந்து ஏராளமான கிராமிய கலை நிகழ்ச்சியான கட்டைக்கூத்து, ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், தாரை தப்பட்டை நாதஸ்வரம், பேண்ட் வாத்தியம் என 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பன் கோவில் அருகிலிருந்து பாத யாத்திரையாக திருவத்தூர் சந்திப்பு, மார்க்கெட், காந்தி சாலை வழியாக பஸ் நிலையம் வரையில் சுமார் ஒரு மணி நேரம் நடந்து வந்தார். அப்போது அவருக்கு பாஜகவினரும் பொது மக்களும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பஸ் நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில் பாஜக தேர்தல் வாக்குறுதியாக கூறிய 295 திட்டங்களையும் குறிப்பாக 10,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரையிலான 12 திட்டங்கள் உள்ளிட்ட 295 வாக்குறுதிகளிலும் பாரத பிரதமர் மோடி நிறைவேற்றிய நிலையில் தற்போது உங்களிடம் மோடிக்காக வாக்குகளை கேட்டு வந்துள்ளேன்.

செய்யாறில் பிரசித்தி பெற்ற ஜடேரி நாமக்கட்டிக்கு மத்திய அரசு மோடி புவிசார் குறியீடு தந்து சிறப்பித்துள்ளார் வருகிற தேர்தலில் பாஜக தேர்தல் அறிக்கையில் வேளாண்மை நிறைந்த செய்யாறு தொகுதியில் நிச்சயம் வேளாண் கல்லூரி அமைப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்படும் மீண்டும் மோடி பாரதப் பிரதமராக வர வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் 90 மாற்றுத் திறனாளிகளுக்கு போர்வை, 5 ஊனமுற்றோருக்கு 3 சக்கர சைக்கிள் வண்டியும், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு காய்கறி வியாபாரம் செய்ய நான்கு சக்கர தள்ளு வண்டியும், செய்யாறு தொகுதிக்கு உட்பட்ட 30 மட்டைப்பந்து குழுக்களுக்ககு அனைத்து உபகரணம் அடங்கிய கிட், 2000 பேருக்கு டி-ஷர்ட் வழங்கப்பட்டது.

Tags

Next Story