கட்சியின் முடிவு எனது முடிவு- அண்ணாமலை

கட்சியின் முடிவு எனது முடிவு- அண்ணாமலை

அண்ணாமலை 

கட்சித் தலைமை முடிவெடுத்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள பாஜக நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கருத்து கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதில் பங்கேற்றார். பேசிய பின், செய்தியாளர்களை சந்தித்தார். கட்சி தலைமை என்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில், போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன், பிரச்சாரம் மேற்கொள்ள சொன்னால் பிரச்சாரம் செய்வேன் ஆனால் என்னை பொறுத்தவரை எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது கட்சித் தலைமையின் முடிவு எனது முடிவு என அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளீர்களா என்ற செய்தியாளர் கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

Tags

Next Story