அண்ணாமலை தமிழிசை இடையே மோதலா? மீண்டும் மாநிலத் தலைவராக விரும்புகிறாரா தமிழிசை!

அண்ணாமலை தமிழிசை இடையே மோதலா? மீண்டும் மாநிலத் தலைவராக விரும்புகிறாரா தமிழிசை!

 தமிழிசை - அண்ணாமலை 

அடுத்தடுத்த சிக்கலில் அண்ணாமலை!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்-க்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழிசை சௌந்தர்ராஜன் மீண்டும் மாநில தலைவராக பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் 2024- ல் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்த நிலையில் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெற்றிருக்காது என்று எஸ் பி வேலுமணி கூறியது சரிதான் என அண்ணாமலைக்கு எதிராக திரும்பி உள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அதிமுகவை மக்கள் நிராகரித்து விட்டனர். பாஜக தமிழகத்தில் வளர்ச்சியை எட்டியுள்ளது என பேசி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோவையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, அண்ணாமலை முதலில் மாநிலத் தலைவர் பதவியை காப்பாற்றி கொள்ளட்டும் எனவும் மாநில தலைவர்களாக தமிழிசை, எல்.முருகன் போன்றோர் இருந்தபோது கூட்டணி நன்றாக தான் இருந்தது. கூட்டணி முறிந்ததற்கு அண்ணாமலை தான் காரணம். அதிமுக-பாஜக கூட்டணியாக போட்டியிட்டு இருந்தால் 31 முதல் 35 இடங்களை பெற்றிருக்கலாம் என்று கூறினார்.

தமிழிசை மாநில தலைவராக இருந்தபோது கூட்டணி சரியாகத்தான் இருந்தது என எஸ் பி வேலுமணி கூறியதாலோ, தமிழிசை சௌந்தர்ராஜனும் எஸ் பி வேலுமணி கூறியது சரிதான், அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் திமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெற்று இருக்காது என்று கூறியிருக்கிறார்.

மேலும் ஆளுநர் பணியை விட்டு தமிழகத்தில் பணியாற்றுகிறேன். ஆளுநர் பணியை விட்டதில் நானே கவலைபடவில்லை. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். நாங்கள் வெற்றி பெறக்கூடிய நபர்கள் ஆனால் இரண்டாம் இடம் வந்து விட்டோம் என அண்ணாமலையை சாடியுள்ளார்.

ஆளுநர் பதவியையும் விட்டுவிட்டு தமிழகத்தில் தடபுடலாக பணியாற்றி வரும் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலைக்கு எதிராகவும் குறள் எழுப்பியுள்ளது அவரது தமிழக மாநில தலைவர் பதவிக்கான முன்னெடுப்பா என்றும் கேள்வி எழும்பியுள்ளது.

Tags

Next Story