அண்ணாமலை டெபாசிட் வாங்க முயற்சிக்க வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

அண்ணாமலை டெபாசிட் வாங்க முயற்சிக்க வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

கோயம்புத்தூரில் டெபாசிட் வாங்க அண்ணாமலை முயற்சிக்க வேண்டும், அண்ணாமலைக்கு எந்த விதமான அடிப்படை புரிதலும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான கார்த்தி சிதம்பரம் சிவகங்கை ஆர்டிஎம் கல்லூரி அருகே பல்வேறு அமைப்புகள், கட்சியினரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் செய்தியாளரிடம் அவர் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சிக்கு சரித்திர சண்டை போடும் பழக்கம் உண்டு. பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் மோசமான மூன்றாவது இடத்திற்கு செல்லும் என்றும், அண்ணாமலை பகுதி, பகுதியாக நிறைய சீரியல்கள் ரிலீஸ் பண்ணி உள்ளார். அவை அனைத்தும் வெத்து பட்டாசாகி போய் உள்ளது. கோயம்புத்தூரில் டெபாசிட் வாங்க அண்ணாமலை முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்த கார்த்தி சிதம்பரம், அண்ணாமலைக்கு எந்த விதமான அடிப்படை புரிதலும் இல்லை என்று தெரிவித்தார். முதல்வரின் உரிமைத்தொகை சிறப்பான திட்டம். இதை புரிந்து கொள்ளாதவர்களுக்கு பொருளாதாரமும் தெரியாது, மக்களின் தேவைகளும் சரியா தெரியாதவர்கள் தான் அதை விமர்சனம் செய்கின்றார்கள் என்று தெரிவித்தார்.

Tags

Next Story