அண்ணாமலையின் 2-ஆம் கட்ட நடைபயணம்: ஆலங்குளத்தில் இன்று தொடக்கம்

அண்ணாமலையின் 2-ஆம் கட்ட நடைபயணம்: ஆலங்குளத்தில் இன்று தொடக்கம்

அண்ணாமலையின் நடைபயணம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்தும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி அண்ணாமலை பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். முதல் கட்ட பயணத்தில் மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார். இதில் 7 பாராளுமன்ற தொகுதிகளும் அடங்கும். கடந்த 22-ந்தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை தனது முதல் கட்ட யாத்திரையை நிறைவு செய்தார்.

இந்த நிலையில், அண்ணாமலை தனது 2-ம் கட்ட நடைபயணத்தை இன்று மாலை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடிக்கு அண்ணாமலை வந்தார். அங்கிருந்து காரில் நெல்லைக்கு புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தனது 2-வது கட்ட நடைபயணத்தை தொடங்குகிறார்.அண்ணாமலையின் 2-ஆம் கட்ட நடைபயணம்: ஆலங்குளத்தில் இன்று தொடக்கம்

https://www.dailythanthi.com/News/State/second-phase-of-annamalais-yatra-start-today-1045164அண்ணாமலையின் 2-ஆம் கட்ட நடைபயணம்: ஆலங்குளத்தில் இன்று தொடக்கம்

https://www.dailythanthi.com/News/State/second-phase-of-annamalais-yatra-start-today-1045164

Tags

Read MoreRead Less
Next Story