இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடும் நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாகர்கோவில் இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் சார்பதிவாளர் ஆண்ட்ரூ என்பவரின் இருசக்கர வாகனத்தில் புரோக்கர்கள் மூலம் இரண்டு கட்டுகளாக கொடுக்கப்பட்ட 60,000 ரூபாய் ரொக்கம் கணினி அறையில் 7,500 ரூபாய் ரொக்கம் மற்றும் சார் பதிவாளருக்கு கொடுக்க கொண்டு வந்த ரூபாய் 42,000 ஆகியவை தற்போது வரை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோதனை நடை பெற்று வருகிறது.

தொடரும் சோதனை முடிவில் தான் கூடுதலாக எவ்வளவு பணம் கைப்பற்றப்படுகிறது என்பதும் யார் யார் மீது வழக்குகள் பதிவாகும் நிலை வரும் என்பதும் தெரியவரும்.

Tags

Read MoreRead Less
Next Story