காருக்குள் கட்டுகட்டாக பணம் - பெண் அதிகாரி மீது வழக்குப்பதிவு

காருக்குள் கட்டுகட்டாக பணம் - பெண் அதிகாரி  மீது வழக்குப்பதிவு

பிரேமா ஞானகுமாரி

புளியரை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் காருக்குள் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடி பகுதியில் தினசரி பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகள் சரக்கு வாகனங்கள் பல்வேறு விதமான பொருள்களை ஏற்றி கேரளா மாநிலத்திற்கு செல்வது வழக்கம். அதேபோல், கேரளாவில் இருந்தும் தமிழ்நாட்டிற்குள் வாகனம் வந்துபோவது வழக்கம். மேலும் பால் வண்டிகள், காய்கறி வாகனங்கள் உள்ளிட்டவைகள் என தினசரி அதிகளவில் செல்வது உண்டு. இந்த நிலையில் புளியரை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு தொடர்ந்து மூன்று நாட்களாக வேலைப்பார்த்து வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரியை சோதனை செய்தபோது, அவரின் காரில் கொண்டு வந்த சுமார் ரூ.2.76 லட்சம் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். இப்பணத்திற்கு உரிய விளக்கம் தராத நிலையில், அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.



Tags

Next Story