நெமிலியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை: ரூ 1.44 லட்சம் பறிமுதல்
சோதனை மேற்கொண்டுள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்
நெமிலி பிடிஓ அலுவலகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிடிஓ அலுவலக வளாகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசனுக்கு செல்போன் மூலம் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் இரவு 9 மணி அளவில் பிடிஓ அலுவலக வளாகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆய்வு குழு துணை அலுவலர் சரவணமுத்து, டிஎஸ்பி கணேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உதவி செயற்பொறியாளர் அரிகிருஷ்ணன் (50) என்பவர் அலுவலகத்தில் இல்லாததால் அவருடைய அறையில் உள்ள பீரோவை சோதனை செய்தபோது 77 ஆயிரமும், இளநிலை தொழில் வரைவாளர் உமா என்பவரிடம் இருந்து 20 ஆயிரமும், அங்கிருந்த மூன்று ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 47 ஆயிரமும் என மொத்தம் 1.44 லட்சம் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இளநிலை வரைவாளர் உமா மற்றும் ஒப்பந்ததாரர்கள் மூவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உதவி செயற்பொறியாளர்ஹரி கிருஷ்ணனிடம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று அரசு அலுவலகங்களில் பணம் பெற்று வேலை செய்யும் அரசு அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருது எதிர்பார்ப்பாக உள்ளது..