அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
போதைப்பொருள் ஒழிப்பு பேரணி
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் தலைமை வகித்து, மாணவர்களிடையே போதை பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்தார். வரலாற்றுத்துறைத் தலைவர் பி.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்து, போதை பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்குவது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியரும் போதை ஒழிப்பு ஒருங்கிணைப்பாளருமான மு. பழனிசாமி செய்திருந்தார்.
Next Story