மக்கள் விரோத ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது-நாராயண் திருப்பதி

மக்கள் விரோத ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது-நாராயண் திருப்பதி

மக்கள் விரோத ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது என கமலாலயத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பேசினார்.


மக்கள் விரோத ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது என கமலாலயத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பேசினார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 50 ஆண்டுகளாக தமிழர்கள் முதுகில் குத்திய உண்மை தற்பொழுது வெளிவந்துள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டு சதி செய்து கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்துள்ளது. அந்த உண்மை இன்றைக்கு வெட்ட வெளிச்சமாகி உள்ளது. திமுக, காங்கிரஸ் கட்சியின் பொய்கள் இன்று நிரூபணமாகி உள்ளது.1974 ல் திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த கருணாநிதி ஒப்புதலோடு கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்துள்ளார். இது திமுக 50 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழக மக்களுக்கு செய்த மிக பெரிய துரோகம். காங்கிரஸ் திமுக கூட்டு சேர்ந்து நமது நாட்டின் ஒரு பகுதியை தாரை வார்த்து கொடுத்து விட்டு இன்று அதை மீட்போம் என்று சொல்லுவது மக்களை ஏமாளிகள் ஆக்கும் முயற்சி. நீட் தேர்வை ஒரு கை எழுத்தில் ஒழிப்போம் என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.

தற்பொழுது வரைக்கும் அவர் என்ன செய்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தது திமுக. அங்கு பல பேர் இறந்ததற்கு காரணம் திமுக.ஒவ்வொரு முறையும் கச்ச தீவு விவகாரத்தில் மத்திய அரசை குற்றம் சாட்டுகிறது. ஆளும்கட்சியாக இருக்கும் அனைத்தையும் கொண்டு வந்து விட்டு எதிர்கட்சியாக இருக்கும் போது எதிர்க்கின்றனர். கல்வி கடன் ரத்து செய்வதாக வாக்குறுதி கொடுத்தது திமுக ஆனால் அதை செய்ததா? உத்தர பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் விலை தமிழகத்தை விட 10 ரூபாய் குறைவு. உத்தர பிரதேச அரசு வரியை குறைத்துள்ளது. யார் மோசடி வருமான வரி ஏய்ப்பு செய்கிறார்களோ அவர்கள் வீட்டிற்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வரும். வேலூரில் கதிர் ஆனந்த் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பெண்களை பார்த்து 1000 ரூபாய் வந்து விட்டதா என்று ஏளனமாக பேசி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்? என் தந்தை தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார் என்று முதல்வர் பதவியில் இருந்து மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்து இருக்க வேண்டும். சுங்க சாவடி கட்டணங்களை திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் ரத்து செய்யபடும் என்று ஸ்டாலின் கூறுகிறார். அவர்கள் ஏன் ஆட்சிக்கு வர வேண்டும்?. ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள பணத்தை மாநில அரசு கொடுத்து விடடும் நாங்கள் அதை அகற்றிவிடுகிறோம். மதவாத அரசியலை திமுக அரசு செய்து வருகிறது. 3 வருடத்தில் சாலை கூட போட முடியாத மோசமான ஆட்சியில் தமிழ்நாடு உள்ளது. அதிமுக ஆட்சியிலும் டாஸ்மாக் இருந்தது, பால் விலை உயர்ந்தது. அதற்காவும் நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால் இன்று மக்கள் விரோத ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. அதிமுக தவறு செய்தாலும் அதை தட்டிக் கேட்போம். பேச்சு வார்த்தை மூலம் தான் கச்சத்தீவு பிரச்சனையை சரி செய்ய முடியும். கச்சத்தீவை இழக்க நாங்கள் தான் காரணம் என்று திமுக மற்றும் காங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கனிமொழி ஒரு பாராளுமன்ற உறுப்பினர், படித்தவர், எனவே அத்வானிக்கு விருது கொடுக்கும் போது குடியரசு தலைவரை நிற்க வைத்ததாக குற்றம்சாட்டுவதை நிறுத்தி விட்டு முதலில் அங்கு என்ன நடந்தது என்பதை முழுவதும் தெரிந்து விட்டு சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story