விஷமுறிவு மருந்தின் தட்டுப்பாடு இன்னமும் நிலவுகிறது - ஈபிஎஸ் !

இன்றும் விஷ சாராய விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை இன்று 3வது நாளாக கூடியது. இன்றும் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையில் வருகை தந்தனர். அவை கூடியதும் சபாநாயகர் அப்பாவு முதலில் கேள்வி நேரம் என்றும் அதன் பிறகு கள்ளக்குறிச்சி சாராய விவகாரம் பற்றி பேச அனுமதிக்கப்படும் என்றார்.

ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

''திமுக அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது. விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரின் நிலை என்ன? நான் சொன்ன மருந்து வேறு. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் மருந்து வேறு. ஒரு நபர் ஆணையத்தால் எந்தவொரு உண்மையும் வெளிவரப் போவதில்லை.

நான் சொன்ன மருந்தின் தட்டுப்பாடு இன்னமும் நிலவுகிறது. ஒரு நபர் ஆணையத்தால் எந்தவொரு உண்மையும் வெளிவரப் போவதில்லை. சி.பி.ஐ. விசாரணை அமைக்க வேண்டும். அதுவே உண்மையை வெளிக்கொண்டு வரும்.

நீதியை நிலைநாட்ட, குற்றவாளிகள் தண்டிக்கப்பட சி.பி.ஐ. விசாரணை அவசியம். நாங்கள் பிரச்னையை எழுப்பும் போதே முதலமைச்சர் பதில் சொல்லி இருந்தால் ஏற்றிருப்போம்.

பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள. பாதிக்கப்பட்ட மக்களுக்காக திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. தேசிய கட்சிகளும் கூட எதுவும் பேசவில்லை.'' என்றார்.

Tags

Next Story