அரக்கோணம் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

X
வேட்புமனு தாக்கல்
அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விஜயன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் விஜயன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடந்து வரும் நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் விஜயன் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வளர்மதியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மேலும் வேட்பு மனு தாக்கல் நிகழ்விற்காக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் ராமு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
