அரக்கோணம்: மண் கடத்திய லாரி பறிமுதல்!
மண் கடத்தல்
அரக்கோணம் அருகே லாரியில் மண் கடத்தி வந்த ஓட்டுநர் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த வளர்புரம் கிராமத்தில் மணல் கடத்தல் நடைபெறுவதை தடுக்க அரக்கோணம் தாசில்தார் செல்வி, வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் கனிமொழி தலைமையிலான அலுவலர்கள் வளர்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கல்குளம் பகுதியில் ஒரு லாரி நின்றிருந்தது. அதன் அருகே அதிகாரிகள் சென்றபோது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர், அதிகாரிகள் லாரியை சோதனை செய்ததில் அதில் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் கனிமொழி லாரியை பறிமுதல் செய்து அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Next Story