மோடிக்கே எச்சரிக்கை! ஆளுநர் ரவி குல்லா போட்டுக் கொள்வாரா? அதிரடி கிளப்பும் அப்பாவு!

மோடிக்கே எச்சரிக்கை! ஆளுநர் ரவி குல்லா போட்டுக் கொள்வாரா? அதிரடி கிளப்பும் அப்பாவு!

 அப்பாவு

திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசிய விவகாரத்தையும், ஒடிசாவில் மோடியின் பிரச்சார பேச்சையும் கையில் எடுத்து விளாசியுள்ளார் அப்பாவு.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒடிசா மாநிலம் புரி ஜெகநாதர் கோயில் சாவி தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் பேசியிருந்தார். இது தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. திமுகவினர் காங்கிரஸ் என அனைத்து தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் பாஜகவும் தொடர்ந்து அதற்கு பதிலடி வழங்கி வந்தது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விசிக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் குடும்பத்தினர் காரில் சென்ற போது விபத்து ஏற்பட்டதில் விஜயகுமாரின் மனைவி மற்றும் அவரது சகோதரி உயிரிழந்தனர். இதனை நலம் விசாரிக்கச் சென்ற தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்கள் குறித்து பிரதமர் மோடி அவ்வாறு பேசியிருக்கக் கூடாது. தமிழர்களே தமிழ்நாடோ கொள்ளை அடிப்பவர்கள் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள முதலீடுகள் தான் குஜராத்திற்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.

மேலும் ஜெயக்குமார் கொலை வழக்கில் கொலை செய்யப்பட்ட நோக்கம் என்ன என்பது தெரியவில்லை ஆனால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என தெரிவித்தார்.

இதனை அடுத்து கடந்த ஜனவரி மாதம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திருவள்ளுவரின் போட்டோவை காவிநிற உடையில் இருக்கும் வகையில் வெளியிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். மேலும் திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடையும் நெற்றியில் விபூதி கைகளில் விபூதி கழுத்தில் ருத்ராட்சமும் அணிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு எதிரில் எதிர்ப்பு தெரிவித்த இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பிய தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, "ஆளுநருக்கு குல்லா அணிவித்தால் ஏற்பாரா? அவரது மனைவிக்கு பர்தா அணிவித்தால் ஏற்பாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்படி ஏற்றுக்கொண்டால் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதை ஏற்றுக் கொள்கிறோம் என்றும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இதனை தவிர்த்து விட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story