அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா
அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிகலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது. அதன்டி பத்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்விதகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து புதுப்பித்து இருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை திட்டத்திற்குரிய விண்ணப்ப படிவத்தினை அலுவலக வேலைநாட்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று இலவசமாக பெற்றுகொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை அனைத்து அசல் கல்விசான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்
Tags
Next Story