அரியலூர் மளிகை கடையில் தீ விபத்து

அரியலூர் மளிகை கடையில் தீ விபத்து

அரியலூர் மளிகை கடையில் ஏற்பட திடீர் தீ விபத்தால் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.


அரியலூர் மளிகை கடையில் ஏற்பட திடீர் தீ விபத்தால் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

அரியலூர், மே.31- மின்கசிவு காரணமாக மளிகை கடையில் தீவிபத்து ஏற்பட்டதில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது அரியலூர் நகரிலுள்ள சின்னகடை தெருவில் சுகுமார் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக ஆனந்தா மளிகை என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை கடையில் இருந்து புகை வந்தததை பார்த்த அக்கம்பக்கத்தினர் சுகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் கடையை திறந்து பார்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தது இதனையடுத்து அரியலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கடையில் இருந்த அரிசி, பருப்பு, ஷாம்பு, சோப்பு, அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. மேலும் இதுகுறித்து அரியலூர் நகர காவல் நிலையத்தில் அளிக்கபட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story