பாமக வேட்பாளர்கள் ஆதரித்து அர்ஜுன் சம்பத் பிரச்சாரம்!

வாக்கு சேகரிப்பு
campaign

அரக்கோணம் பாமக வேட்பாளரை ஆதரித்து இந்து மக்கள் கட்சி தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கே பாலுவை ஆதரித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வாலாஜா நகர் பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வேட்பாளர் பாலுவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியை நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இந்த பிரச்சாரத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story


