ஆற்காடு: கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு!
மருத்துவமனை
ஆற்காடு அருகே கிணற்றில் மூழ்கிய நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த முப்பதுவெட்டி பகுதியை சேர்ந்த சங்கர் மகன் விக்னேஷ் (24). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். திருமணமாகாத இவர் தனது நண்பர்களுடன் முப்பது வெட்டியை அடுத்த லப்பபேட்டை பகுதியில் தனியார் நிலத்தில் உள்ள கிணற்றில் குளித்துள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து ஆற்காடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சென்று விக்னேசை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் அவர் இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து அவரது உடலை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப பதிவு செய்து, விக்னேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story