ஆம்ஸ்ட்ராங் வழக்கு - 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்

ஆம்ஸ்ட்ராங் வழக்கு - 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்

ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில், 5 நாள் காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உண்மையான குற்றவாளிகளை கைது செய்து விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என அரசியல் கட்சிகளும், பாதிக்கப்பட்டவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக வீடியோ கான்ஃபரன்சிங்கில் ஆஜர்படுத்த அனுமதிக்குமாறு போலீசார் முறையிட்டனர். நீதித்துறை நடுவரும் இதற்கு அனுமதி அளித்தார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பொன்னை பாலுவுக்கு கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது யார் என்பது தொடர்பாகவும் ஒருபுறம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அவரது உறவினர்களை அழைத்து கொலையாளிகள் அனைவரையும் சிறையில் வரிசையாக நிற்க வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story