கலைஞர் கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை : மு.க.ஸ்டாலின்
கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூல் உரிமைத்தொகையின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்களை கலைஞர் எழுதியுள்ளார். 5 முறை முதலமைச்சர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் பொறுப்புகளை வகித்த கருணாநிதி, 15 புதினங்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகளைப் படைத்துள்ளார்.
இந்நிலையில், கலைஞர் கருணாநிதியின் அனைத்து நூல்களின் உரிமையும் அவரது மனைவி ராஜாத்தி அம்மாளிடம் உள்ளது. தற்போது, இவர் முதல்வரின் அறிவிப்பை ஏற்று கலைஞரின் அனைத்து நூல்களையும் நாட்டுடைமை ஆக்க ஒப்புதல் வழங்கினார்.
இதகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: "தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.