வேலூர் சிஎம்சிமருத்துவமனையில் இலவச நீரழிவு மருத்துவ முகாம்

வேலூர் சிஎம்சிமருத்துவமனையில் இலவச நீரழிவு மருத்துவ முகாம் நடைபெற்றது.

வேலூர் சிஎம்சிமருத்துவமனையில் இலவச நீரழிவு மருத்துவ முகாம். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஆண்டுதோறும் இலவச நீரிழிவு மருத்துவ முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மருத்துவமனை வளாகத்தில்நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இ

தனை சிஎம்சி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேஷ் துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் நீரிழிவு ஏற்படாமல் இருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள். நீரிழிவு ஏற்பட்டால் எவ்வாறு அதை அதிகரிக்காமல் பாதுகாத்து தேவையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடற்பயிற்சி ,மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை எடுத்துரைக்கப்பட்டது.

அது தொடர்பான கண்காட்சியும் வைக்கப்பட்டிருந்தது. நீரிழிவு ஏற்பட்டால் அதனால் உடல் உறுப்புகள் பாதிப்பு குறித்த பரிசோதனை முகாமும் நடைபெற்றது . இதில் கண் காது மூக்கு மற்றும் பிற உறுப்புகள் தொடர்பான பரிசோதனையும் செய்யப்பட்டது.

இந்த மருத்துவ பரிசோதனையில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று நீரிழிவு தொடர்பான சந்தேகங்களையும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

Tags

Next Story