ஆத்தூர்: மாடி வீடில்லா அதிசய கிராமம்

ஆத்தூர் அருகே மாடி வீடு இல்லாத அதிசய கிராமம் உள்ளது. கான்கிரீட் அமைத்து வீடு கட்டினால் தெய்வகுத்தமாகிவிடும் என்ற நம்பிக்கையால் இன்று வரை ஒரு மாடி வீடு கூட இக்கிராமத்தில் கட்டப்படவில்லை.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மல்லியகரை ஊராட்சியில் உள்ள கிராமம் கருத்து ராஜாபாளையம். இப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் இப்பகுதி பொதுமக்கள் ஓரளவிற்கு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் கூட கான்கிரீட் வீடுகள் இல்லாமல் மேற்கூரைகள் சிமெண்ட் அட்டை, சீட், மற்றும் கூரை வீடுகளாக இப்பகுதி காட்சியளிக்கிறது.

இதற்குக் காரணமாக கருத்துராஜபாளையம் ஊர் மக்களின் குலதெய்வமான பெரியசாமி இரவு நேரத்தில் ஊரைச் சுற்றி வருவதாகவும் நம்பிக்கை அப்பகுதி பொதுமக்களிடம் உள்ளதாகவும் பெரியசாமி கோவில் பள்ளத்தில் உள்ளதால் கான்கிரீட் தளம் அமைத்து இப்பகுதியில் யாரும் வீடு கட்டுவது இல்லை இரவு நேரத்தில் குலதெய்வமான பெரியசாமி ஊரை சுற்றி வலம் வருவதால் இப்பகுதியில் குதிரை வளர்ப்பதில்லை எனவும் குழந்தையை இரவு நேரத்தில் தொட்டில் கட்டி தூங்க வைப்பதில்லை எனவும் கூறுகின்றனர்.

மேலும் இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த மக்கள் இந்த கிராமத்தை விட்டு அருகில் உள்ள ஊர்களுக்கு குடி பெயர் இருந்தாலும் அங்கும் காங்கிரட் வீடுகள் கட்டுவதில்லை. என்றும் மாடிப்படி அமைத்தால் பெரியசாமி தெய்வத்தை விட அதிக உயரமாக இருக்கும் என்றும், குழந்தைகள் தொட்டிலில் இரவு நேரத்தில் தூங்க வைத்தால் சாமி வந்து மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதையே மீறி காங்கிரட் வீடுகள் அமைத்தால் அந்த வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு கெடுதலோ அல்லது ஊனம் ஏற்படுவதாகவும் மேலும் அந்த குடும்பம் முன்னேற்றம் இல்லாமல் போய்விடுவதாகவும். கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து ராஜபாளையம் ஊர் மக்கள் கூறும் போது இந்த நடைமுறை தலைமுறை தலைமுறையாக இருந்து வருவதாகவும், பெரியசாமி கோவில் இருப்பதால் முன்பு கூரை வீட்டில் வசித்து வந்ததாகவும் தற்போது ஓட்டு வீடு சிமெண்ட் சீட் அமைத்து குடியிருந்து வருவதாகவும் தெரிவித்தார் அதேபோல் குதிரைகள் வளர்ப்பதும் இந்த ஊரில் இல்லை என தெரிவித்தார். எவ்வளவு வசதி படைத்தவர்கள் இருந்தாலும் இதுதான் நடைமுறை என தெரிவித்தார். மத்திய மாநில அரசுகள் குடிசையே இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் கலைஞர் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்த போதிலும் திட்டங்களை கிராம மக்கள் பயன்படுத்த மறுத்து வருகின்றனர்.

Tags

Next Story