கொடிநாள் நிதி வழங்கிய ஆட்டோ டிரைவர். கலெக்டர் பாராட்டு.
கடந்த 7 ஆண்டுகளாக முன்னாள் படை வீரர்களின் நல வாழ்விற்காக கொடிநாளில் நன்கொடை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டி.வி.டி காலனியை சேர்ந்த 41 வயது நிரம்பிய ஆட்டோ டிரைவர் கோபிநாத் என்பவர், கொடிநாள் நன்கொடையாக தான் ஆட்டோ ஒட்டி சேமித்த ரூ.1880 ஐ கலெக்டர் ஸ்ரீதரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலன் துணை இயக்குநர் மேஜர் ஜெயகுமார் (ஓய்வு), கிராமிய கலைஞர் பழனியாபிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆட்டோ ஒட்டுநர் கோபிநாத் கடந்த 7 ஆண்டுகளாக முன்னாள் படை வீரர்களின் நல வாழ்விற்காக கொடிநாளில் நன்கொடை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story