ஆண்டிமடத்தில் ரங்கோலி கோலம் மூலம் விழிப்புணர்வு

ஆண்டிமடத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க ரங்கோலி கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அரியலூர், மார்ச்.27- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற பொது தேர்தலில் வாக்காளர்கள் 100% நேர்மறையாக வாக்களிப்பது குறித்து ரங்கோலி கோலத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆண்டிமடம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி சார்பாக மகளிர் சுய உதவி குழு பெண்கள் கலந்துகொண்டு ரங்கோலி கோலமிட்டு 100 சதவிகிதம் வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து மக்களாட்சியின் மீது பற்று உடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதமின்றியும் வாக்களிப்போம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து 100% வாக்கு பதிவு விழிப்புணர்வு ஊர்வலத்தை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் லட்சுமணன் இந்த ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஊர்வலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தொடங்கி ஆண்டிமடம் பேருந்து நிலையம், நான்கு ரோடு, கடைவீதி வழியாக சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வந்தடைந்தன இதில் வாக்களிப்பது எனது உரிமை வாக்களிப்பது எனது கடமை, வாக்களிப்போம் வாக்களிப்போம் 100% வாக்களிப்போம், ஜனநாயகம் காத்திட அவசியம் வாக்களிப்போம், அறம் செய்ய விரும்பு வாக்களிப்பு விரும்பு, வாக்களிப்போம் வாக்களிப்போம் மறவாத வாக்களிப்போம் என கோஷங்கள் எழுப்பியவாறு பாரதமாதா போன்று பெண் ஒருவர் வேடம் அணிந்து தேசிய கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். இதில் உதவி திட்ட அலுவலர்கள் ராஜ்குமார், கலைவாணன், மேனேஜர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் குணசேகரன், வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர்கள் சுய உதவிக் குழு பெண்கள் அரசு அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story