ஜப்பானில் தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்திற்க்கு விருது.

ஜப்பானில் தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்திற்க்கு விருது.வழங்கப்பட்டது.
மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம், சுற்றுப்பயணங்களை உருவாக்குவதன் மூலம் உள்ளூர் சமூகத்திற்கு அதன் பொருளாதார பங்களிப்பிற்காக மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் அதன் முயற்சிகளுக்காகவும் அங்கீகரிக்கப்பட்டது. இத்தகைய உன்னத முயற்சிகளுக்காக ஜப்பான் நாட்டின் 7வது ஜப்பான் சுற்றுலா விருது வழங்கும் விழாவில் செயற்குழுவின் விருதிற்கு இத்திட்டம் தேர்வு செய்யப்பட்டது. ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற 7 வது ஜப்பான் சுற்றுலா விருது வழங்கும் விழாவில், ஜப்பான் சுற்றுலா கண்காட்சி செயற்குழுவின் தலைவர் ஹிரோயுகி தகாஹாஷி (Hiroyuki Takahashi) அவர்கள் தமிழ்நாட்டின் மன்னார் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்திற்காக வழங்கிய செயற்குழுவின் விருதினை சுற்றுலாத்துறை அமைச்சர் .கா.ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர். க.மணிவாசன் கலந்து கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story