போதை பொருட்களை உட்கொள்வதன் தீமை குறித்து விழிப்புணர்வு

போதை பொருட்களை உட்கொள்வதன் தீமை குறித்து விழிப்புணர்வு

போதைப்பொருட்களின் தீமை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

போதைப்பொருட்களின் தீமை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசும் போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் துறை சார்ந்த 110 அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, 250 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் தொடங்கப்படும். 38 மாவட்டங்களிலும் புற்றுநோய்க்கான மருத்துவமனை அமைக்கப்படும்.

சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைக்கு, இரைப்பை சிகிச்சைக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் துறை தொடங்கப்படும். மலைவாழ் மக்களுக்கு அவசர மருத்துவ சேவை அடித்து இருசக்கர வாகன தேவை 1 கோடியே 60 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும். கே கே நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக மருத்துவமனை 50 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

போதை பொருட்கள் ,மது மற்றும் புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல குறைபாடுகள் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் காவல் துறையினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உயிர் காக்கும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை சென்னை ஸ்டான்லி கோயம்புத்தூர் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

Tags

Next Story