நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி சிலிண்டரால் 100 என்று எழுதி விழிப்புணர்வு

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி சிலிண்டரால் 100 என்று எழுதி விழிப்புணர்வு

விழிப்புணர்வு 

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி சிலிண்டரால் 100 என்று எழுதி விழிப்புணர்வுகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கி வருவாய் கோட்டாட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அரியலூர்,அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே எரிவாயு சிலிண்டர் கிடங்கில் 100% வாக்களிக்க வலியுறுத்தி ஸ்டிக்கர் ஒட்டியும் 100 என்பதை சிலிண்டர் கொண்டு எழுதி 100% வடிவில் வைத்து வருவாய் கோட்டாட்சியரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அமராவதி இண்டேன் எரிவாயு கிடங்கில் உள்ள எரிவாயு சிலிண்டரில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் , உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியருமான ஷீஜா தலைமையில் சமையல் எரிவாயு சிலிண்டரில் விழப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் எரிவாயு சிலிண்டரால் நூறு என்ற எழுதப்பட்டு 100% வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் கலிலூர் ரஹ்மான், வட்ட வழங்கல் அலுவலர் மீனா, ஆதி திராவிட நல அலுவலக வருவாய் ஆய்வாளர் சத்யா, கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், அமராவதி இண்டேன் எரிவாயு கிடங்கு மேலாளர் பிரேம் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100% வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story